1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டில் ஜீவன்!

ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் ஜீவன்
கிருஷ்ணலீலையில் ஸெல்வன் இயக்கத்தில் நடித்துவரும் ஜீவன் அடுத்து ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இரண்டாம் வரிசையில் இருந்தாலும் முதல் வரிசை தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஜீவனுக்கு வாய்ப்புகள் வருகின்றன. கவிதாலயாவை தொடர்ந்து, ஜெமினி சர்க்யூட்.

மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த சுதா கோங்ரா ஜெமினி சர்க்யூட் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். ஜோடி முடிவாகவில்லை.

நயன்தாராவுடன் ஜோடி சேரவேண்டும் என்பது ஜீவனின் ஆசை. பலமுறை முயன்றும் வாளை மீனாக வழுக்கிக் கொண்டு ஓடுகிறார் நயன்தாரா. அவரது ஓட்டத்தைப் பார்த்தால் இந்த முறையும் சிக்கமாட்டார் என்பது உறுதி.
About Writer
Webdunia