1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

மீண்டும் அஜ்மல்!

அஜ்மல் அஞ்சாதே TN07 AL-4777 Taxi No.9211
அஞ்சாதேயில் கவனம் ஈர்த்த அஜ்மல் அடுத்து 'TN07 AL-4777' என்ற படத்தில் நடிக்கிறார். நம்பரைப் பார்த்து மிரள வேண்டாம். தமிழ்ப் படம் ஒன்றில் பெயர்தான் இது.

இந்தியில் நானா படேகர், ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளிவந்த Taxi No.9211 படம் லஷ்மிகாந்தன் இயக்கத்தில் தமிழில் ரீ-மேக்காகிறது. நானா படேகர் வேடத்தில் நடிப்பவர் பசுபதி. அவருக்கு ஜோடி சிம்ரன்.

ஜான் ஆபிரகாம் நடித்த வேடத்திற்கு அஜ்மலை தேர்வு செய்துள்ளார் லஷ்மிகாந்தன். நரேனைப் போலவே மலையாளத்தை விட தமிழில் அதிகம் கவனம் செலுத்த உள்ளாராம் அஜ்மல். இவருக்கு ஜோடி தேடும் படலம் நடந்து வருகிறது.
About Writer
Webdunia