சிவாஜியை முந்திய குருவி!
|
சூப்பர் ஸ்டாரின் சிவாஜியையே சைக்கிள் கேப்பில், ஸாரி... தியேட்டர் கேப்பில் தாண்டியிருக்கிறது குருவி. இதுவரை ஒரு காம்ப்ளக்ஸில் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படம் என்ற சாதனை சிவாஜிக்கு இருந்தது.
சென்னையிலுள்ள மல்டி ஃபினிக்ஸ் ஒன்றில் 25 காட்சிகள் (ஒரு தினத்தில்) திரையிடப்பட்டது சிவாஜி. இந்த சாதனையை குருவி முறியடித்திருக்கிறது.
தமிழ் திரையரங்கு சரித்திரத்திலேயே முதல் முறையாக ஒரே நாளில் 33 காட்சிகள் குருவி திரையிடப்பட்டது. இளம் ஹீரோக்கள் யாரும் அண்ட முடியாத அபார சாதனை இது. தசாவதாரம் குருவியின் சாதனையை உடைத்தால்தான் உண்டு.
