1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

தயாரிப்பாளர் ஆகும் திருமதி ஜீவா!

ஜீவா அனீஸ் தன்வீர்
மறைந்த இயக்குநர் ஜீவாவின் மனைவி அனீஸ் தன்வீர், கணவர் ஜீவாவின் படங்களில் காஸ்ட்யூட் டிசைனராக பணிபுரிந்தவர். ஜீவாவின் மறைவால் 'தாம்தூம்' படத்தின் மீதமுள்ள காட்சிகளை எடுக்க உதவிகரமாய் இருந்தவர்.

இப்போது 'முத்திரை' என்ற படத்தை தயாரிக்கிறார். தயாரிப்போடு நின்றுவிடாமல் கதை, திரைக்கதையும் எழுதி திருமதி ஜீவா என்பதை நிரூபிக்கவுள்ளார்.

ஸ்ரீநாத் இயக்கப் போகும் இப்படத்தில் நிதின் சத்யா, டேனியல் பாலாஜி, லட்சுமிராய் போன்றவர்கள் நடிக்கவுள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று நடந்த 'முத்திரை'யின் தொடக்க விழாவில் நடிகர் விக்ரம், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், தயாரிப்பாளர்கள் விக்ரம் பட், ஜெயேந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

விழாவில் பேசிய விக்ரம், "சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஜீவாவின் கனவு அவர் மனை அனீஸ் மூலம் நிறைவேறும்" என்று குறிப்பிட்டார்.
About Writer
Webdunia