உலகம் சுற்றும் நமிதா!
|
அழகிய தமிழ் மகனில் நமிதாவுக்கு இரண்டே வசனம். ஆயினும் ஒரு முழு பாடல் காட்சிக்காக வெளிநாடு அழைத்துச் சென்றனர். பில்லாவில் நாலு வசனம். நாற்பது நாள் மலேசியாவில் தங்க வைத்தனர். வரப்போகும் பெருமாளிலும் இதே கதைதான். ஆனாலும் மொரீஷியஸ் அழைத்துச் சென்று ஆட வைத்தனர்.
இப்போது இந்திர விழாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காகவும் நமிதாவை மலேசியா அழைத்துச் செல்கிறார்கள். வழக்கம் போல ஸ்ரீகாந்துடன் ஒரு டூயூட் பாடுகிறார்.
வந்த, வரப்போகிற எல்லாப் படங்களிலும் நமிதாவை அழைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பிளைட் ஏறுகிறார்கள். ஓசியில் உலகம் சுற்றும் நமிதாவைப் பார்த்து பொறாமை வராவிட்டால் தான் ஆச்சரியம்!
