1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

தருண்கோபி இயக்கத்தில் ஜீவன்!

தருண்கோபி காளை ஜீவன்
படத்துக்குப் படம் வித்தியாசம் காட்ட நடிகர்கள் உடம்பை முறுக்குகிறார்கள், ஹேர் ஸ்டைலை மாற்றுகிறார்கள், பட்டினி கிடந்து இளைக்கிறார்கள், இன்னும் என்னென்னவோ செய்கிறார்கள். நடிகர் ஜீவன் மட்டும் எதுவுமே செய்வதில்லை. நடிப்பைக் கூட மாற்றுவதில்லை. ஆனால், அரை டஜன் படங்கள் எப்போதும் இவர் கைவசம் இருக்கிறது.

காளையில் காயம்பட்ட தருண்கோபியும் தனது புதிய படத்தின் ஹீரோவாக தேர்ந்தெடுத்திருப்பது ஜீவனைதான்.

காதல், வெயில் படங்களை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட்ட எஸ்.பி. சூர்யபிரகாஷ், தருண்கோபி, ஜீவன் இணையும் புதிய படத்தை தயாரிக்கிறார்.

படத்துக்கு நல்ல பெயராக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
About Writer
Webdunia