1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

மீண்டும் பில்லா ஜோடி!

பில்லா ஏகன் அஜித் நயன்தாரா
இது நான்காவது ஹீரோயின். இவராவது நிலைப்பாரா? அஜித்தின் 'ஏகன்' படத்தில் முதலில் ஸ்ரேயா நடிப்பதாகச் சொல்லப்பட்டது. அவர் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு ஆடவே, ஏகனிலிருந்து அவரை கழற்றிவிட்டார் அஜித்.

பிறகு கத்ரினா கைஃப் ஒப்பந்தமானார். திடீரென இரண்டு புதிய இந்திப் படங்களில் வாய்ப்பு வரவே, ஏகனிலிருந்து கைஃப் விலகினார்.

நடுவில் தமன்னாவிடமும் கால்ஷீட் கேட்கப்பட்டது. இந்த கதாநாயகி குளறுபடிகளின் முடிவில், இறுதியாக நயன்தாராவை அஜித் ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். மீண்டும் இணையும் இந்த பில்லா ஜோடி, இறுதி வரை நிலைக்குமா இல்லை பிரியுமா?

நயன்தாரா படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் வரை உறுதியாகக் கூறமுடியாது!
About Writer
Webdunia