1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ஏமா‌ந்து போன ‌வி‌க்ர‌ம்

ஏமா‌ந்து போன ‌வி‌க்ர‌ம்
பீமா பட ரிலீஸுக்கு விக்ரம் கடைசி நேரத்தில் பண உதவி செய்தார். மூன்று படங்களில் நடி‌த்‌திரு‌க்க வேண்டியது பீமா படத்தினால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

அந்த வகையில் தனக்கு பனிரெண்டு கோடி நஷ்டம் என்று வெளிப்படையாக பேசும் விக்ரம் இன்னொரு விசயத்தை வெளியே சொல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வளவு போராட்டத்திற்கு பிறகு பீமா படம் ரிலீஸாகி இருக்கிறது. படம் நன்றாக இருக்கும் என்ற ஒரே காரணத்தால்தான் விக்ரம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார். ஆனால் படம் பழசாக இருக்கிறது. படத்தில் சரக்கும் இல்லை என்று விமர்சனங்கள் வருகிறதாம்.

அதோடு வசூலும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பதால் வருத்தத்தில் இருக்கிறாராம் விக்ரம்.
About Writer
Webdunia