1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

அதிக சம்பளம் கேட்டு அதிர வைக்கும் கமாலினி

அதிக சம்பளம் கேட்டு அதிர வைக்கும் கமாலினி
ஆனந்த விகடன் நிறுவனத்திற்காக புதுமுக இயக்குனர் ராஜேஷ் இயக்கும் படம் நானும் என் காதலி சந்தியாவும். இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக கமாலினி முகர்ஜியை கேட்டிருக்கிறார்கள். அவர் கேட்ட சம்பளத்தை கேட்டு வாயடைத்து போய் உட்கார்ந்திருக்கிறார்கள்.

கமாலினிக்கு தமிழில் படம் இல்லை என்றாலும் அவர் கேட்கும் சம்பளம் 20 லட்சமாம்.

கொஞ்சம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கேட்டிருக்கிறார்கள். சம்பளத்தை குறைக்க முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டாராம்.

இதனால் வேறு நடிகையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
About Writer
Webdunia