1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ச‌ம்பள‌த்தை உய‌ர்‌த்‌திய தனு‌ஷ‌்

ச‌ம்பள‌த்தை உய‌ர்‌த்‌திய தனு‌ஷ‌்
தீபாவளி‌க்கு வெ‌ளிவ‌ந்த படங்களில் பொல்லாதவன் காட்டில்தான் அடைமழை. அ‌தி‌ல் ச‌ற்றே ச‌ந்தோஷ‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறா‌ர்!

இதற்கு முன்பு தனது படங்கள் சரியாக போகாதபோது சம்பளத்தை குறைத்துக்கொண்ட மாதிரி பொல்லாதவன் வெற்றிக்கு அப்புறம் சம்பளத்தை கூட்டிவிட்டார். அப்படியும் அவரது கால்ஷீட்டுக்காக ஏகப்பட்டபேர் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

தனுஷ் ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் கணக்குப்படி அடுத்த படம் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்குதான் பண்ணவேண்டுமாம்.

அவ‌ர் ஒரு பக்கம் இயக்குனர்களிடம் கதை கேட்டுக்கொண்டிருக்க... இன்னொரு பக்கம் பொல்லாதவன் வெற்றிக்கூட்ட‌ணியை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்கிற முயற்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் கதிரேசன்!