1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

சூடு போடப் பார்க்கும் சக்கரவியூகம்!

சூடு போடப் பார்க்கும் சக்கரவியூகம்!
அஸ்தவிநாயக் கிரியேஷன்ஸூம், நட்ராஜ் ஆத்ட்ஸூம் இணைந்து தயாரிக்கும் படம் சக்கரவியூகம். பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் என்ற நட்டிதான் படத்துக்கு ஹீரோ.

அவருக்கு ஜோடியாக மும்பை பார்ட்டியான டெய்சி சோப்னா நடிக்கிறார். உதயபாணு மகேஸ்வரன் இயக்கும் இந்தப்படம் முடிந்து ரொம்ப நாளாகிவிட்டது.

இப்போது வந்து ஹீரோயின் பிரச்சினை பண்ணினார். கொடுத்த காஸ்ட்யூமை போட மறுத்தார் என்று புகார் வாசித்திருக்கிறார்கள். டூ பீஸ் போடக்கூட ரெடி என்கிற நடிகை எப்படி நடிக்க மறுத்தார் என்று விசாரித்தால்...

சமீபத்தில் மிருகம் படத்தில் இயக்குனருக்கும் ஹீரோயினுக்கும் நடந்த சண்டையை மீடியா ஏகத்துக்கும் பூஸ்ட் பண்ணியது. அதுமாதிரி ஆசைப்பட்டு இப்படி கிளப்புகிறார்களாம்.

ரொம்ப நல்லாயிருக்கு!
About Writer
Webdunia