1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

மீண்டும் படப்பிடிப்பில் நான் கடவுள்

மீண்டும் படப்பிடிப்பில் நான் கடவுள்
நான் கடவுள் படத்தின் படப்பிடிப்பு இடையில் கொஞ்சநாள் நடக்காமல் இருந்தது. இன்றிலிருந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. படப்பிடிப்பை முடிக்காமல் சென்னைக்கு வருவதில்லை என்று பாலா பெரியகுளம் ஏரியாவிலேயே இருக்கிறார்.

அதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. படம் இயக்க ஆரம்பித்துவிட்டால் அதே மூடூலேயே இருப்பார் பாலா. அதனால்தான் கதை டிஸ்கஸனை கூட படப்பிடிப்பு நடக்கும் பெரியகுளத்திலேயே வைத்துக்கொண்டார்.

டிசம்பர் இறுதிக்குள் படத்தை முடிக்கும் திட்டத்தில் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
About Writer
Webdunia