1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

சுந்தர்.சிக்கு ஜோடியாக மீனாட்சி!

பெருமாள்
webdunia photoFILE
தவமாய் தவமிருந்து படத்தை தயாரித்த சிருஷ்டி பிலிம்ஸ்சின் அடுத்த தயாரிப்பு பெருமாள்.

சுந்தர்.சி.ஹீரோவாக நடிக்க நமிதாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்புக்கும் கிளம்ப்பிப் போனார் இயக்குனர் விசென்ட் செல்வா.

போன இடத்தில் இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் பிரச்சினையாகி இயக்குனரை தூக்கிவிட்டதாக செய்தி வந்தது.

தயாரிப்பாளர் தரப்பு இருவரையும் கூப்பிட்டு சமாதானப்படுத்திய கையோடு கதையிலும் சின்ன மாற்றம் ச்ய்திருக்கிறார்கள்.

அதன் படி படத்தில் இன்னொரு ஹீரோயினாக கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் நடித்த மீனாட்சியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

அப்போ நமீதா? இரண்டாவது ஹீரோயினுக்கு தள்ளிவிட்டார்கள்.
About Writer
Webdunia