நயன்தாராவின் பாரபட்சம்
|
வல்லவன் மற்றும் தெலுங்கு படங்களில் நயன்தாரா கவர்ச்சியாக நடித்தார். அதைப் போலவே யாரடி நீ மோகினி படத்தில் பாடல் காட்சியில் கொஞ்சம் கிளாமராக நடிக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
கவர்ச்சியான காஸ்டியூம் போடமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம். ஆரம்பத்திலேயே நிறையே நிபந்தனைகளோடு தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் நயன்தாரா.
இதனால் இயக்குனர் பேசாமல் விட்டுவிட்டாராம். ஆனால் இப்போது அம்மணி பில்லாவில் ஆடை குறைப்பு செய்வதை கேள்விபட்டு,நமக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று நொந்து போயிருக்கின்றனர் யாரடி நீ மோகினி படக்குழுவினர்.
