1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் சுந்தர்.சி

சுந்தர்.சி
நாளது தேதிப்படி அதிக படங்களில் நடிக்கும் நடிகர் சுந்தர்.சி என்பதை ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

அதில் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் படமும் ஒன்று. ஒரே நேரத்தில் பேரரசு இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிப்பதோடு, இன்னொரு படத்தை தயாரித்து இயக்கப் போகிறார் ஷக்தி சிதம்பரம்.

இதில் கதாநாயகனாக சுந்தர்.சி நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்கிறார். முக்கியமான கேரக்டரில் இளமை துள்ளலோடு நடிக்கப் போகிறார் நதியா. படுகலக்கலான இந்தப் படத்துக்கு பலே பாண்டியா என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

அதில் ஏதாவது சிக்கல் வருவது மாதிரி இருந்தால் மாற்று டைட்டிலாக என்ன வைத்திருக்கிறார்கள் தெரியுமா? பொறுக்கி!?