வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (09:46 IST)

வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிட்டால் என்ன ஆகும்?

உலகம் முழுவதும் பலரால் சாக்லேட் விரும்பி சாப்பிடப்படும் உணவாக இருந்தாலும், சில வகைகளில் சாக்லேட் உடல்நல பிரச்சினைகளையும் தரக்கூடியது.

  • குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பும் சாக்லேட் கோகோ பழ விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
  • சாக்லேட்டால் உடலுக்கு பல நன்மைகள் உள்ளதை போல சில உடல் பிரச்சினைகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.
  • காலையில் வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரை அளவை வெகுவாக அதிகரித்துவிடும்.
  • சாக்லேட்டில் பால், சர்க்கரை பொருட்களுடன் வாசனைக்காக சில வேதியல் பொருட்களும் சேர்க்கப்படுவதால் செரிமான கோளாறு உண்டாகும்.
  • வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடுவதால் வயிற்று வலி, குமட்டல் உள்ளிட்டவையும் ஏற்படும்.
  • அதிகமாக சாக்லேட் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சேர்வதுடன், இதய பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
  • எப்போதும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து எதையும் சாப்பிடுவது நல்லது.