தீபாவளி ஸ்பெஷல் ரவா லட்டு தயாரிப்பது எப்படி?
தீபாவளி வருகிறது. தீபாவளியென்றால் பட்டாசுக்குப் பிறகு இனிப்பு வைகைகள்தான் சிறப்பு. இதில் நாமே சில இனிப்புகளை வீட்டில் தயார் செய்யலாம். அப்படி ரவா லட்டு எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வறுத்த ரவை - 100 கிராம்
பொடி செய்த சக்கரை - 200 கிராம்
(மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்)
நெய் - 50 கிராம்
பால் - 50 மில்லி
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
செய்முறை:
வறுத்த ரவையுடன், நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சையை போடவும். பொடி செய்த சர்க்கரையை வறுத்த ரவையுடன் சேர்க்கவும்.
இந்த கலவையில் சூடான பாலை விடவும். பொறுக்கும் சூட்டில் அதை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சுவையான ரவா லட்டு தயார்.