1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By J. Durai
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (07:42 IST)

ரேஷன் கடையில் 3 மாதங்களாக பொருட்கள் வழங்கவில்லை?

மூன்று மாத காலமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கவில்லையான சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.


சிதம்பரம் அருகே முகையூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், அவர்களுக்கு நியாய விலை கடையில் வழங்க வேண்டிய பொருட்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணியாற்றிய ஊழியர் அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, சர்க்கரை, உள்ளிட்ட பொருட்கள் வாங்காமல் வெள்ளை சீட்டில் எழுதி கொடுத்துவிட்டு வந்த நிலையில் அந்த ஊழியர் வேற ஊருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக வந்த நியாய விலை கடை ஊழியரிடம் பொதுமக்கள் சீட்டை கொடுத்து பொருட்கள் கேட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல முன்பு பணிபுரிந்தவர்களிடம் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு, மேலும் 3 கால மாதம் ஆகியும் இதுவரையில் நியாய விலை கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இதுவரையில் வழங்கப்படாமல் இருப்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டவர் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சாலையில் முகையூர் கிராமத்தில் சாலைமரியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, தகவல் அறிந்து வந்த டி.நெஞ்சேரி புத்தூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், அப்போது போலீசாரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது, பின்பு பொதுமக்களை சமாதானம் செய்த போலீசார் உங்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை நாங்கள் பேசி வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்ததன் பெயரில் சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.

குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முகையூர் கிராமத்தில் நியாய விலை கடையில் பணியாற்றிய ஊழியர் பணத்தைப் பெற்றுக் கொண்டு பொருட்கள் வழங்காமல் நூதன முறையில் கையாடல் செய்தது பொது மக்களிடையே பெரும் ஆத்திரத்தை கிளப்பி உள்ளது மேலும் தற்போது உள்ள ஊழியர் அதற்கு பொருட்கள் வழங்க முடியாத என கூறியது மேலும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக மாவட்ட நுகர்வோர் அதிகாரிகள் உரிய விசாரணை செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை உடனடியாக வழங்கவும், நூதனம் முறையில் கையாடல் செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.