புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2019 (17:53 IST)

'தமிழகத்தில் என் மகளுக்கு கொடுமை' ... பேராசிரியர் மோசமானவர்! - முகமது லத்தீஃப்

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவருக்கு பேராசிரியர்கள் அழுத்தம் கொடுத்ததாகவும் பல்வேறு செய்திகள் வெளியானது. இதையடுத்து  ஃபாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது
இந்நிலையில், ஃபாத்திமாவின் தந்தை லத்தீப்,  இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல்வேற் பரபரப்பான தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது :
 
எனது மகளது மரணத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாகும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். சம்பவங்களை பார்க்கும்போது பாத்திமா மரணம் தற்கொலை போல் தெரியவில்லை. எனது மகள் ஃபாத்திமாவுக்கு மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. எனது மகள் தற்கொலைக்கு பேராசியர் சதர்சன பத்மநாபன் தான் காரணம். பேராசிரியர் சதர்சன பத்மநாபனை மிகவும் மோசமானவர் என பலமுறை மகள் என்னிடம் கூறியுள்ளார்.
 
எந்த ஒரு காரியத்தையும் கடிதமாக எழுதிவ்பைப்பார் ஃபாத்திமா. அதேபோல் இதையும் செய்துள்ளார். எனது கடிதம் எழுதிவைத்துதான் இறந்துள்ளார். 
 
 
பாத்திமாவின் இறந்த செய்தியைக் கேட்டு நாங்கள் சென்றபோது, அறையில் கயிறு இல்லை. அதனால் சீல் வைக்கவும் இல்லை. எனது மகள் நன்றாக படிப்பவர் , எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுப்பவர் என தெரிவித்துள்ளார்.
 
ஃபாத்திமாவின் செல்போன் போலீஸ் வசம் உள்ளது. அதை பெற்றோர் முன்னிலையில் அன் லாக்  செய்ய வேண்டும் . தமிழகத்தில் என்  மகளுக்கு கொடுமை நடந்துள்ளது. இதுபோல் வேறு யாரும் மரணமடையக் கூடாது.
 
தமிழக அரசையும், டிஜிபியையும் முழுமையாக நம்புகிறேன். முழுமையாக  விசாரணை நடக்கும் என நினைக்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.