திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (08:40 IST)

ஒரே நாளில் உச்சத்துக்கு சென்ற ஓட்டுனரின் வாழ்க்கை – 41 கோடிக்கு அதிபதியான சுவாரஸ்யம் !

அபுதாபி வாடகைக் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஜிஜேஷ் என்ற ஓட்டுனருக்கு லாட்டரி சீட்டொல் 41 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிஜேஷ் கொரோத்தன். இவர் தனது குடும்பத்தோடு அபுதாபியில் தங்கி அங்கே வாடகைக் காரை ஓட்டும் ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக ஓட்டுனராக பணியாற்றி வரும் அவருக்குக் கடந்த சில தினங்களாக கொரோனா காரணமாக வருவாய் எதுவும் இல்லாமல் தவித்து வந்த அவர் ஒரே நாளில் 40 கோடி ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளார்.

லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கமுள்ள ஜிஜேஷ் அரபு எமிரேட்ஸின் மாதாந்திர அபுதாபி 'பிக் டிக்கெட் லாட்டரி' சீட்டினை வாங்கியுள்ளார். இதற்கானக் குலுக்கல் கடந்த 3 ஆம் தேதி கொரோனா காரணமாக இணையத்தில் நடந்துள்ளது. அதில் அவரது லாட்டரி எண்ணான 041779 க்கு 20 மில்லியன் த்ராம்ஸ் அதாவது 41 கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் அவர் 40 கோடிக்கு அதிபதியாகியுள்ளார்.

இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ள ஜிஜேஷ் இந்த பணத்தில் சொகுசு கார்கள் வாங்கி வாடகைக்கு விடப்போவதாகவும்,  தனது மகளின் படிப்பு செலவுக்கு பயனப்டுத்தப்போவதாகும் அவர் தெரிவித்துள்ளார்.  தனது குடும்பத்தை இனிமேல் கேரளாவுக்கே அனுப்பிவிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.