Daily Horoscope
✕

"தோனி ஒரு ஜீனியஸ்"...ஆஸ்திரேலியா கேப்டன் புகழாரம்

Updated: சனி, 13 ஜூலை 2019 (16:00 IST)
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி, ஒரு ஜீனியஸ் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் புகழ்ந்து கூறியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில், நியூஸிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில், இந்தியா படுமோசமான தோல்வியை கண்டது. மேலும் இந்த போட்டியில் கிரிக்கெட் வீரர் தோனி, 50 ரன்களை குவித்து ரன் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் தோல்விக்கு காரணம் தோனி தான் என பரவலாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தோனி குறித்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், நியூஸிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில், தோனி அவுட் ஆகாமல் இருந்திருந்தால், நிச்சயமாக இந்திய அணியை வெற்றி பெற வைத்திருப்பார் என்றும், தோனி கிரிக்கெட்டின் ஜீனியஸ் என்றும் புகழந்துள்ளார்.

மேலும், தோனி இல்லை என்றால் பல போட்டிகளில், இந்திய அணி வென்றிருக்க வாய்ப்பில்லை எனவும், மேலும் ஒரு நாள் போட்டிகளில், இந்திய அணியின் மற்ற வீரர்களை விட அவர் சிறப்பாவே விளையாடி உள்ளார் எனவும் புகழ்ந்து தள்ளினார்.

”நாம் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தோனி ஒரு சிறந்த வீரர். மிடில் ஆர்டரில் அவர் இருக்கும் வரை, அணியில் உள்ள அனைவருக்கும் விளையாட வாய்ப்பளிக்கிறார்’ என்று ஆஸிதிரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் குறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

52 பந்துகளில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்...

நிதானமான விளையாடும் ருத்ராஜ்.. கேப்டனை மாற்ற சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை...

இந்திய பவுலர்களுக்கு விக்கெட் விழவே இல்லை.. போராடி டிரா செய்த நியூசிலாந்து..

இந்தியா வெற்றிக்கு இன்னும் 5 விக்கெட்டுக்கள் தேவை.. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து போராட்டம்...

720 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த இந்தியா... கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் அபார சதங்கள்...

அடுத்த கட்டுரையில்
Show comments