1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (16:31 IST)

மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது… யுவ்ராஜ் சிங் வீடியோ!

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது எனக் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் யுவ்ராஜ் சிங். உலகக்கோப்பை டி20 போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் அடித்து இவர் நிகழ்த்திய சாதனை இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் ஆட்டநாயகன் விருது பெற்றவர்.கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங் “நமது தலைவிதியை கடவுள்தான் தீர்மானிக்கிறார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நான் மீண்டும் பிட்ச்சிற்கு திரும்புகிறேன்” எனக் கூறி இருந்தார். இந்நிலையில் இப்போது வெளியிட்டுள்ள வீடியோவில் ‘இந்த ஆண்டின் சரியான நேரம் இதுதான். நீங்கள் தயாரா?. அனைவருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. காத்திருங்கள்’ எனக் கூறியுள்ளார். இந்த திடீர் வீடியோவால் அவர் திரும்பவும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.