திங்கள், 10 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 9 மார்ச் 2025 (10:13 IST)

இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி தங்க பேட் பெறுவாரா கோலி…?

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அதிலும் கோலி போன்ற ஒருவர், ரன் மெஷினாக உலகக் கிரிக்கெட்டைக் கலக்கிய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது மிகவும் கவலையளிப்பதாக இருந்தது. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் சிறந்த கம்பேக்கைக் கொடுத்துள்ளார்.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து தான் இன்னமும் ‘ரன் மெஷின்தான்” என்பதை நிரூபித்தார். நேற்றைய அரையிறுதிப் போட்டியிலும் இக்கட்டான நிலையில் மிகச்சிறப்பாக விளையாடி 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக இருந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 5 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார். மற்ற அனைத்தும் ஒன்றும் இரண்டுமாக ஓடி சேர்த்ததுதான்.

இந்நிலையில் இன்றைய இறுதிப் போட்டியில் அவர் சிறப்பாக ஆடி ரன்களைக் குவிக்கும் பட்சத்தில் இந்த தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பெற்று தங்க பேட்டைப் பெறுவார். அவருடன் இந்த போட்டியில் நியுசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலி 217 ரன்கள் சேர்த்திருக்க, ரச்சின் 226 ரன்கள் சேர்த்துள்ளார்.