Daily Horoscope

அரைசதம் வரைக்கும் மாணிக்கம்… அதுக்கப்புறம் பாட்ஷா – வில் ஜாக்ஸ் படைத்த புதிய சாதனை!

Written By vinoth
Updated: திங்கள், 29 ஏப்ரல் 2024 (11:31 IST)
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்ட நிலையில் ஆர்சிபி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 200 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சாய் சுதர்ஷன் 49 பந்துகளில் 84 ரன்களும், ஷாரூக்கான் 30 பந்துகளில் 58 ரன்களும் அடித்தனர்.

நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்ட நிலையில் ஆர்சிபி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 31  பந்துகளில் அரைசதம் அடித்த வில் ஜாக்ஸ், அடுத்த பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து 41 பந்துகளில் சதமடித்தார்.

இதன் மூலம் தனது இன்னிங்ஸின் இரண்டாவது அரைசதத்தை அவர் வெறும் பத்தே பந்துகளில் எட்டி ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதற்கு முன்பு கிறிஸ் கெய்ல் 2013 ஆம் ஆண்டில் 13 பந்துகளில், விராட் கோலி 2016 ஆம் ஆண்டில் 14 பந்துகளிலும் அதிகவேகமாக அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments