வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 10 ஜனவரி 2021 (13:25 IST)

நல்ல தொடக்கத்துக்கு பின்னர் சரிந்த இரண்டு விக்கெட்கள் – நாளை தாக்குப் பிடிக்குமா இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி இந்தியா போட்டியை டிரா செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 94 ரன்கள் முன்னிலை கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று 2-வது இன்னிங்சை விளையாடியது 6 விக்கெட்கள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் அறிவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 403 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆஸி தரப்பில் அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷான் முறையே 81 மற்றும் 73 ரன்களை சேர்த்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் மற்றும் சைனி தலா 2 விக்கெட்களையும், பூம்ரா மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்டமுடிவில் 2 விக்கெட்களை இழந்து 94 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா அரைசதம் அடித்தும் கில் 31 ரன்களிலு அவுட் ஆகினர். தற்போது களத்தில் புஜாராவும் ரஹானேவும் உள்ளனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 309 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் விக்கெட்களை விடாமல் ட்ரா செய்ய போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.