Daily Horoscope
✕

பேட்டிங் சொதப்பல்… ரஞ்சிப் போட்டிக்கு முன்னதாக பழைய கோச்சிடம் ஆலோசனை பெறும் கோலி!

Written By vinoth
Updated: திங்கள், 27 ஜனவரி 2025 (10:37 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி  190 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இதன் காரணமாக சீனியர் வீரர்கள் உள்பட அனைவரும் ஓய்வு கிடைக்கும் போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தப்பட்டனர். இதையேற்று ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்கள் மாநில அணிகளுக்காக விளையாடிய நிலையில் வரும் 30 ஆம் தேதி டெல்லி அணிக்காக பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிப் போட்டியில் விளையாடவுள்ளார் கோலி.

அதற்கு முன்பாக இப்போது மும்பையில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த பயிற்சியின் போது இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரும் கோலியுடன் இருந்து அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

எல்லாம் காட்டு

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments