சனி, 28 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 13 ஜூன் 2024 (06:48 IST)

ஐசிசி விதியால் இந்தியாவுக்கு லட்டாக கிடைத்த 5 பெனால்டி ரன்கள்!

மிகவும் மந்தமாக செல்லும் டி 20 உலகக் கோப்பை தொடரில் நேற்று மீண்டும் ஒரு மந்தமான போட்டி நடந்து முடிந்துள்ளது. நேற்று இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதையடுத்து முதலில் பேட் செய்த அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 110 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்களும், அக்ஸர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் ஆடிய இந்திய அணியும் பேட்டிங்கில் சொதப்பி 19 ஆவது ஓவரில்தான் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அமெரிக்க அணி செய்த ஒரு தவறால் இந்திய அணிக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட்டன. ஐசிசி உருவாக்கியுள்ள புதிய விதிமுறையின் படி ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை ஒரு நிமிடத்துக்குள் தொடங்கவேண்டும். ஆனால் அமெரிக்கா இதில் தாமதம் காட்டவே, இரண்டு முறைக்கு மேல் மூன்றாவது முறை இந்திய அணிக்கு 5 பெனால்டி ரன்களை வழங்கினர் நடுவர்கள்.