உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி?... ராகுலுக்கு பதில் விளையாட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!

சனி, 6 மே 2023 (08:20 IST)
சில தினங்களுக்கு முன்னர் லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார்.

பேட்டிங்கிலும் இக்கட்டான ஒரு சூழலில் 11 ஆவது வீரராகவே களமிறங்கினார். ஆனாலும் அவரால் ரன்கள் ஓடமுடியவில்லை. இந்நிலையில் இப்போது அவர் மருத்துவர் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கலாமா என்பதை மருத்துவர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது ராகுல் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் மற்றும் அடுத்த மாதம் தொடங்க உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆகியவற்றில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லண்டனில் நடக்கும் போட்டியில் ராகுலுக்குப் பதில் இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் அல்லது ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய மூவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.

எல்லாம் காட்டு

அதிக சேம் சைடு கோல்கள்.. 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மோசமான சாதனை..!

ஒரு பெருமைமிகு சாதனை.. ஒரு மோசமான சாதனை.. வைபவ் சூர்ய வன்ஷியின் அறிமுக போட்டியில் நடந்தது என்ன?

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

அடுத்த கட்டுரையில்
Show comments