Daily Horoscope
✕

தோனி, யுவ்ராஜ் செய்ததை அவரால்தான் செய்யமுடியும்... ஹர்பஜன் சிங் பாராட்டிய இந்திய வீரர்!

Updated: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (15:18 IST)
கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இப்படி சொதப்புவதால், அவர் டி 20 போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். ஆனால் பிளேயிங் லெவன் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அவரைக் கண்டிப்பாக ப்ளேயிங் லெவன் அணியில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதுபற்றி மேலும் “ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கி ரன்கள் அடிப்பது எளிது. ஆனால் மிடில் ஆர்டரில் ரன்கள் சேர்ப்பது கஷ்டம். கேப்பைக் கண்டறிந்து அதற்கான ஸ்ட்ரோக்கை சரியாக ஆடி பவுண்டரிகள் எடுக்க வேண்டும். அதை சரியாக செய்த தோனி, யுவ்ராஜ் சிங் போல சூர்யகுமார் யாதவ்வும் செய்வார். 20 பந்துகளில் 50-60 ரன்களை அடித்து விடுவார் அவர். அதனால் அவர் அணியில் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments