வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 13 மார்ச் 2023 (08:49 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை மிஸ் செய்யும் ஸ்ரேயாஸ்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இடையே இந்திய அணியின் நடுவரிசை வீரர் ஸ்ரேயாஸ் முதுகுவலியால் காயமடைந்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்யவில்லை. இப்போது அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடந்துவரும் நிலையில் அவர் ஆஸி. அணிக்கு எதிராக விரைவில் தொடங்கும் ஒருநாள் தொடரிலும் இடம்பெற வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. தொடர்ந்து காயமடைந்து பல போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் இழந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.