செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 13 ஜனவரி 2025 (14:09 IST)

சாம்பியன்ஸ் ட்ராஃபியில் இடம் கிடைக்குமா? ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை மூன்றாவது முறையாக வென்றது. ஆனால் சமீபத்தில் நடந்த மெஹா ஏலத்தில் அவரை கொல்கத்தா அணி தக்கவைக்கவில்லை.

அதே போல சர்வதேச போட்டிகளிலும் அவருக்கு தற்போது வாய்ப்புகள் அரிதாகி வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதன் பிறகு அவருக்கு போதுமான வாய்ப்புகள் அணியில் கிடைக்கவில்லை. டி 20 உலகக் கோப்பை தொடரில் கூட அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவருக்கு  இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி பேசியுள்ள ஸ்ரேயாஸ் ‘உலகக் கோப்பை தொடரில் நான் ராகுலோடு இணைந்து சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடினேன். ஆனால் முடிவு நாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” எனக் கூறியுள்ளார்.