Daily Horoscope

மீண்டும் தோனி தலைமையில் விளையாடுவதை நினைத்தால்… ஷர்துல் தாக்கூர் நெகிழ்ச்சி!

Written By vinoth
Updated: சனி, 16 மார்ச் 2024 (09:22 IST)
ஐபிஎல் 2024 சீசன் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் சி எஸ் கே அணி வீரர்கள் பெரும்பாலானவர்கள் சென்னை வந்து பயிற்சியை தொடங்கினர். தோனி பத்து நாட்களுக்கு முன்பாகவே சென்னை வந்து சேர்ந்தார். வீரர்கள் அனைவரும் இப்போது சென்னை மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு ஷர்துல் தாக்கூர் மீண்டும் சென்னை அணிக்கே திரும்பியுள்ளார். முதலில் சென்னை அணிக்காக விளையாடிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மெஹா ஏலத்தில் கே கே ஆர் அணியால் வாங்கப்பட்டார். தற்போது மீண்டும் மினி ஏலத்தில் சி எஸ் கே அணிக்கே திரும்பியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள தாக்கூர் “மீண்டும் தோனி தலைமையில் விளையாட உற்சாகமாக இருக்கிறேன். ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்று அவர் அணியை சிறப்பாக வழிநடத்துவார். வீரர்கள் அனைவருக்கும் முழு சுதந்திரம் அளித்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவார்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments