புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 25 டிசம்பர் 2024 (13:35 IST)

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. நாளை மெல்போர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது.

இந்த தொடரில் முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய தொடக்க ஜோடியான கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் அதே நிலையில் ஆடினர். கேப்டன் ரோஹித் ஷர்மா ஆறாவது வீரராக இறங்கி நான்கு இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் நாளைய டெஸ்ட்டில் ரோஹித் ஷர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக ஆடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே எல் ராகுல் மூன்றாவது இடத்திலும் ஷுப்மன் கில் ஆறாவது இடத்திலும் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கில் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.