திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 6 ஜூன் 2024 (08:07 IST)

கேப்டனாக t20 போட்டிகளில் தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா…!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி நேற்று தங்கள் முதல் போட்டியை ஆடியது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அயர்லாந்து அணியை இந்திய பவுலர்கள் 96 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.

பின்னர் பேட் செய்த இந்திய அணி 2 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. கேப்டன் ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் டி 20 கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

சர்வதே டி 20 போட்டிகளில் 72 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 வெற்றிககளைப் பெற்றிருந்தார் தோனி. ஆனால் இப்போது 55 போட்டிகளில் 42 வெற்றிகளைப் பெற்று ரோஹித் ஷர்மா அதிக வெற்றிகளைப் பெற்ற இந்தியக் கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.