Daily Horoscope
✕

விராட் கோலி தன்னுடைய சிறந்ததை இறுதிப் போட்டிக்காக சேமித்து வைத்திருக்கிறார்- ரோஹித் நம்பிக்கை!

Written By vinoth
Updated: வெள்ளி, 28 ஜூன் 2024 (08:06 IST)
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து வீழத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 57 ரன்களும் சூரியகுமார் யாதவ் 47 ரன்களும் எடுத்தனர்.

172 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடிய நிலையில் இந்திய பவுலர்கள் அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் அபார பந்துவீசி இங்கிலாந்து அணியை 103 ரன்களுக்கு சுருட்டினர். இருவரும் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்த, பும்ரா  2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலமாக மூன்றாவது முறையாக இந்திய அணி டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த தொடர் முழுவதும் சரியாக விளையாடாத கோலி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “அவரின் தரம் என்ன என்பதை நாம் அறிவோம். 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் சிறப்பாக விளையாடும் போது ஃபார்ம் என்பது எல்லாம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அவர் தன்னுடைய சிறந்த இன்னிங்ஸை இறுதிப் போட்டிக்காக சேர்த்து வைத்திருக்கிறார்” என அவருக்கு ஆறுதலாக பேசியுள்ளார்.
 

எல்லாம் காட்டு

ஜோஸ் பட்லருக்கு தொடையில் அறுவை சிகிச்சை.. 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா?

வெற்றி பெற 421 ரன்கள்.. அதிகபட்ச சேஸிங் ரன்களை எட்டுமா தென்னாப்பிரிக்கா...

டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கு கிரிக்கெட் போட்டி மாற்றமா? பிசிசிஐ விளக்கம்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சதமடித்து அசத்தல்.. இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவாரா ஜடேஜா?

3-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.. அபிஷேக் ஷர்மா அதிரடி அரைசதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments