செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 19 அக்டோபர் 2023 (13:40 IST)

215 கிமீ., வேகத்தில் கார் ஓட்டியதற்காக ரோஹித் சர்மாவுக்கு அபராதம்

rohit sharma
மும்பை –புனே அதிவிரைவு  சாலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிவேகமாக கார் ஓட்டியதற்காக அவருக்கு  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, நேபாளம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

விறுவிறுப்பாக நடந்து வரும் நிலை இத்தொடரில் இந்திய அணி தனது 4 வது போட்டியில் வங்கதேச அணியை  இன்று எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்த போட்டி நடக்கும் நிலையில்,  புனேவில் வீரரகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் பங்கேற்பதற்காக மும்பை – புனே அதிவிரைவு சாலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது  Lamborghini –ல் 215கிமீட்டர் வேகத்தில் அதிவேகமாக கார் ஓட்டியதற்காக அவருக்கு 3 அபராத செல்லான்கள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.