வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:16 IST)

களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்ற ரிங்கு சிங்!

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நேற்று இரண்டாவது டி 20 போட்டி டப்ளின் நகரில் நடக்க முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் ருத்துராஜ் (58), சஞ்சு சாம்சன் (40), ரிங்கு சிங் (38) என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து 186 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 152 ரன்கள் மட்டுமே சேர்த்து போட்டியை 33 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது.

இந்த போட்டியில் 21 பந்துகளில் 38 ரன்கள் விளாசிய ஐபிஎல் புகழ் ரிங்கு சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ரிங்கு சிங் தான் களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் “நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். ஐபிஎல்லில் நான் செய்ததை இந்த போட்டியிலும் செய்ய முயற்சித்தேன். நான் மிகவும் நம்பிக்கையுடன் அமைதியாக இருக்க முயற்சித்தேன். கேப்டனின் பேச்சைக் கேட்கிறேன் . நான் 10 வருடங்களாக விளையாடி வருகிறேன். எனது அனைத்து முயற்சிகளும் பலனளித்தன. எனது முதல் ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருதை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” எனக் கூறியுள்ளார்.