1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 19 பிப்ரவரி 2025 (15:01 IST)

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

இன்று தொடங்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்டார் பந்துவீச்சாளரான பும்ரா காயம் காரணமாக இடம்பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார்.

அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரில் அவர் மட்டும் இல்லாது போயிருந்தால் இந்திய அணி படுமோசமான தோல்வியைப் பெற்றிருக்கும். ஆனால் அவருக்கு பக்கபலமாக யாரும் இல்லாததால் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோற்றது. இந்நிலையில் அவரின் இடத்தை நிரப்ப ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரில் யாரை பயன்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “பும்ரா இல்லாததால் அவருக்குப் பதில் நான் ஒரு இடது கை பந்துவீச்சாளரைதான் அணியில் தேர்வு செய்வேன். அர்ஷ்தீப் சிங் டி 20 உலகக் கோப்பையில் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார் என்பதை நாம் பார்த்தோம். ராணாவும் நல்ல பவுலர்தான். ஆனால் அவரால் இறுதி ஓவர்களில் சிறப்பாக செயல்பட முடியாது. இடது கை பவுலர்களின் பந்துவீச்சு முறை முற்றிலும் மாறானது. அவர்களால் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்த முடியும். எனவே நான் கேப்டனாக இருந்தால் அர்ஷ்தீப்பைதான் அணியில் எடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.