Daily Horoscope
✕

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்… டேபிள் டாப்.. RCB ரசிகர்களே இதெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

Written By vinoth
Updated: திங்கள், 28 ஏப்ரல் 2025 (11:26 IST)
நேற்று நடந்த பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது.  நேற்றைய போட்டியில், டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து எட்டு இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. நேற்றைய போட்டியில் கே எல் ராகுல் 41 ரன்கள், ஸ்டாப்ஸ் 34 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணியின் புவனேஷ் குமார் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெடுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து, 163 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியில் முதலில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்கள் விழுந்து அந்த அணித் தடுமாறியது. அப்போது விராட் கோலியுடன் கூட்டணி அமைத்த க்ருனாள் பாண்ட்யா மிகச்சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டியில் க்ருணால் பாண்டியா அதிரடியாக விளையாடி 73 ரன்கள் அடித்த நிலையில் அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த இன்னிங்ஸில் ஆர் சி பி வீரர் ஹேசில்வுட் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலருக்கான ஊதா நிற தொப்பியைப் பெற்றார். அதே போல பேடிங்கில் விராட் கோலி அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனுக்கான ஆரஞ்ச் நிறத் தொப்பியைப் பெற்றார். மேலும் ஆர்சிபி அணி அட்டவணையில் 7 வெற்றிகளோடு முதலிடத்திலும் உள்ளது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments