Daily Horoscope

பண்ட், சர்பராஸ் அபார ஆட்டம்… மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் பாதிப்பு…!

Written By vinoth
Updated: சனி, 19 அக்டோபர் 2024 (14:06 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அதிர்ச்சியளிக்கும் விதமாக 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் டக் அவுட் ஆகி ஏமாற்றினர்.

இதனை அடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகின்றது. இந்திய அணியைப் போல தடுமாறாமல் நியுசிலாந்து வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் நேற்றைய ஆட்டமுடிவில் சேர்த்திருந்தனர். தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து அணி 402 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி மீண்டெழுந்து சிறப்பாக விளையாடி வருகிறது. அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 111 பந்துகளில் சதமடித்தார். அவரோடு இணைந்த ரிஷப் பண்ட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார். இந்திய அணி 344 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆடிக் கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. இந்திய அணி இன்னும் 12 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments