Daily Horoscope
✕

இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!

Written By vinoth
Updated: வெள்ளி, 28 ஜூன் 2024 (22:24 IST)
உலகக் கோப்பை தொடரின் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்க உள்ளது. இந்திய அணி இதுவரை இந்த தொடரில் எந்த அணியிடமும் தோல்வியே பெறவில்லை. லீக் போட்டிகளில் மழை காரணமாக ஒரு போட்டியின் முடிவு மட்டும் தெரியவில்லை. சூப்பர் 8 சுற்றிலும் அனைத்து போட்டிகளிலும் வென்று, அரையிறுதியையும் வென்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

இதே போலதான் தென்னாப்பிரிக்கா அணியும், இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திககாத அணியாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி தோல்வியே சந்திக்காத இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறை. 

இந்நிலையில் இன்று போட்டி நடக்கும் பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் போட்டி நடக்கும் நேரத்தில் மழை பெய்ய 40 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. ஒருவேளை நாளை மழைக் காரணமாக போட்டி நடத்தப்பட முடியாவிட்டாலோ அல்லது பாதி நடக்கையில் மழை குறிக்கிட்டாலோ ரிசர்வ் நாளான நாளை மறுநாள் போட்டி நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments