செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 17 மே 2017 (14:27 IST)

ஐபிஎல்10 - இறுதி போட்டிக்கு நேரடியாக செல்வது யார்?

ஃப்ளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் இன்று புனே, மும்பை ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த புனே அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 குவித்துள்ளது.


 

 
ஃப்ளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் புனே, மும்பை ஆகிய விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றிப்பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு செல்ல தேர்வாகும். டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
அதன்படி முதலில் பேட் செய்த புனே அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராகானே, மனோஜ் திவாரியுடன் இணைந்து அடித்து ஆடினார். ரகானே 43 பந்துகளில் 58 ரன்கள் குவிந்து ஆட்டமிழந்தார்.
 
மனோஜ் திவாரி 48 பந்துகளில் 58 ரன்கள் குவித்து ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். தோனி 26 பந்துகளில் 40 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதையடுத்து புனே அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள்.
 
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை விளையாட தொடங்கியுள்ளது.