1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஜூலை 2018 (19:57 IST)

ஓய்வு பெற்றார் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத வீரர்

இந்திய அணியில் மறக்கமுடியாத இடத்தை பிடித்த முகமது கைப் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 
முகமது கைப் பெயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. இவரும் யுவராஜ் சிங் களத்தில் நிற்கும் எதிர் அணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க மிகவும் சிரமப்படுவார்கள். பறந்து பறந்து கேட்ச் பிடிப்பதில் வல்லவர்.
 
2000ஆம் நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் கேப்டனாக இருந்து இந்திய அணிக்கு கோப்பை பெற்று தந்தவர். 2002ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியின் இடம்பிடித்தார். நாட்வெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றி காரணமாய் நின்றார். 
 
2006ஆண் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதன்பின்னர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதால் 2013ஆம் ஆண்டுக்கு அதிலும் இடம்பெறவில்லை. உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். 
 
தற்போது 37 வயதாகும் முகமது கைப் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.