1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 23 நவம்பர் 2024 (08:42 IST)

பவுன்சர் வந்தால் அதை விட்டுவிடு… இளம் வீரருக்குக் கம்பீர் சொன்ன அட்வைஸ்!

16 ஆவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.

அதையடுத்து பேட் செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அறிமுகப் போட்டியில் களமிறங்கிய நிதீஷ்குமார் எட்டாவது வீரராக இறங்கி 41 ரன்கள் சேர்த்து இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்ட காரணமாக இருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய இன்னிங்ஸ் பற்றி பேசியுள்ள அவர் “போட்டிக்கு முன்பாக நான் பயிற்சியாளர் கம்பீருடன் பேசினேன். அப்போது அவர் பவுன்சர்கள் அல்லது அதிவேக பந்துகள் வந்தால் அதை விட்டுவிடு. உன் நாட்டுக்காக நீ வாங்கும் புல்லட் என்று அதை நினைத்துக் கொள் என்றார்” எனக் கூறியுள்ளார்.