6.5 கோடிக்கு வாங்கிய வீரருக்கு காயம்… டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவு!

Updated: செவ்வாய், 29 மார்ச் 2022 (13:08 IST)
டெல்லி அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட மிட்செல் மார்ஷ் காயமடைந்துள்ளதால் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் இளம் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானில் உள்ளார். ஆனால் அங்கு பயிற்சியின் போது போது அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரை முடித்துவிட்டு அவர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக கலந்துகொள்ள இருந்தார். இப்போது அந்த தொடரிலும் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஏலத்தில் மிட்செல் மார்ஷை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

எல்லாம் காட்டு

ஸ்பெயின் வீரர் போட்ட ஒரே ஒரு கோல்.. ஆபாச நடிகை மியா கலீஃபாவுக்கு ரூ. 6.27 கோடி லாபம்..

வலி அதிகமா இருக்கு!.. காயம் ஆறுவது கடினம்!.. மெஸ்ஸி உருக்கம்....

கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு இத்தனை கோடியா? குவியும் பரிசுமழை...

FIFA உலக கால்பந்து போட்டி!.. அர்ஜென்டினா கோட்டை விட்டது எங்கே?...

டி20 தொடரை அடுத்து ஒருநாள் தொடரையும் இழந்த இந்தியா.. ரசிகர்கள் அதிருப்தி..

அடுத்த கட்டுரையில்
Show comments