Daily Horoscope

டீகாக், பூரான் அதிரடி.. பவுலிங்கில் கலக்கிய மேக்ஸ்வெல்- பெங்களூர் அணிக்கு லக்னோ நிர்ணயித்த இலக்கு!

Written By vinoth
Updated: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (21:19 IST)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாஃப் டு பிளசிஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் டிகாக் (81), ஸ்டாய்னஸ்(24) மற்றும் பூரான் (40) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். கேப்டன் கே எல் ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. பெங்களூர் அணியில் சிறப்பாக பந்துவீசிய மேக்ஸ்வெல் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். யாஷ் தயார் 24 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். சேஸிங்கில் சிறப்பாக செயல்படும் ஆர் சி பி அணி இந்த இலக்கை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments