செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (19:00 IST)

தோனியிடம் சொன்னதை செய்து காட்டிய கோலி !

கடந்த 2015 ஆம் ஆண்டு தோனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார். அதன்பிறகு இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் விராட் கோலி பொறுப்பேற்றார்.

அப்போது அவர் , அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணிதான் உலகில் அசைக்கமுடியாத நம்பர் 1 அணியாக இருக்கும் எனக் கூறினார்.

அதேபோல் தற்போது வலுமிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியாக மாற்றியுள்ளார்  விராட் கோலி. தான் சொன்னத்தைச் செய்துவிட்டதாக விராட் கோலிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

முந்தைய ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிபோல் உலகில் பலமிக்க அணியாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளது. சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2-1 எனக் கைப்பற்றியது. ஆனால் முதலிடம் பெறவில்லை. பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உலக டெஸ்ட் சேப்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிக்கைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 121 புள்ளிகளுடன்(24போட்டி) முதலிடத்தில் உள்ளது.அடுத்து பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸை வென்ற நியூசிலாந்து 120 புள்ளிகளுடன் (18 போட்டிகள்)2 ஆம் இடமும், இங்கிலாந்து 109 புள்ளுகளுடன்( ( 32போட்டிகள்) 3 ஆம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.