INDvsWI: கோலியின் அபார சதத்தால் வலுவான நிலையில் இந்தியா!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துத் தந்தனர்.
அதன் பின்னர் வந்த கோலி, ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 438 ரன்கள் என்ற சிறப்பான ரன்களுக்கு சென்றது. இந்திய அணி சார்பில் சதமடித்த கோலி, 121 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது.