செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:57 IST)

ரசிகர்களிடம் விசில் அடிக்க சொல்லி கேட்ட கோலி… உற்சாகமான ரசிகர்கள்!

கேப்டன் கோலி ஆடுகளத்தில் இருந்த ரசிகர்களை விசில் அடிக்க சொல்லி கேட்டது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியை 134 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. சிறப்பாக பந்துவீசிய அஸ்வின்  5 விக்கெட்களை வீழ்த்தினார். ஒரு இன்னிங்ஸில் 29 ஆவது முறையாக அவர் 5 விக்கெட்களை வீழ்த்துகிறார்.
 இதனால் சென்னை ரசிகர்கள் நேற்று  முழுவதும் களத்தில் உற்சாகமாக இருந்தனர்.

அப்போது ஒரு கட்டத்தில் ரசிகர்களின் உற்சாகத்தால் குஷியான கேப்டன் கோலி ரசிகர்களை நோக்கி விசிலடியுங்கள் என சொல்ல அவர்களும் விசிலடித்து உற்சாகப்படுத்தினர். ஆனாலும் விடாத கோலி ‘கேட்கவில்லை இன்னும் சத்தமாக அடியுங்கள் ‘ என சைகை செய்ய ரசிகர்கள் மேலும் ஆர்வமாகி விசில் அடிக்க ஆரம்பித்தனர். கோலியின் இந்த செய்கை மைதானத்தை மேலும் கலகலப்பாக்கியது.