திங்கள், 25 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2023 (07:58 IST)

கோலி சுயநலவாதியா?..கே எல் ராகுல் சொன்ன விளக்கம்!

விறுவிறுப்பாக நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது 4 வது போட்டியில் வங்கதேச அணியை  நேற்று எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், டாஸ் 66 ரன்னும், ஹசன் 51 ரன்னும், மஹ்முதுல்லா 46 ரன்னும் அடித்தனர். எனவே 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழ்ப்பிற்கு 256 ரன்கள் அடித்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி  42 ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி நான்காவது வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் 42 ஆவது ஓவரில் கோலி 97 ரன்கள் சேர்த்திருந்த போது அடித்த ஒரு பந்தில் சிங்கிள் ஓடவில்லை. அடுத்த பந்தில் சிக்ஸ் அடித்து அதன் மூலம் சதத்தைப் பூர்த்தி செய்தார் கோலி. இதனால் அணியின் நெட் ரன்ரேட் பற்றி கவலைப்படாமல் கோலி சுயநலமாக தன்னுடைய சாதனைகளுக்காக விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி பேசிய கே எல் ராகுல் “கோலி அந்த சிங்கிளுக்கு என்னை அழைத்தார். நான்தான் வேண்டாம் என மறுத்தேன். கோலி ரசிகர்கள் நான் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாக நினைத்துக் கொள்வார்கள். அதனால் சிங்கிள் எடுக்கவில்லை என்றால் தவறாகிவிடும் என்றார். நான்தான் சிறப்பான வெற்றியை நாம் பெறுவோம். சதத்தை பூர்த்தி செய்யுங்கள் எனக் கூறினேன்” எனக் கூறியுள்ளார்.